பொலன்னறுவை, வெலிக்கந்த, நாமல்கம பகுதியில் வயல்வெளியில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வெலிக்கந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.