இந்திய தம்பதிகள் கிரிந்த கடற்கரையில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
நீரில் மூழ்கிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.