முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஈழத்தமிழர்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தை தஞ்சம் அடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு சிறுவர், ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.