தியாகி பொன்.சிவகுமாரனின்50 வருட நினைவைந்தல் நிகழ்வு இன்று (05) உரும்பிராயிலுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில், தியாகி சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி, அமைச்சர் டக்களஸ் தேவனாந்தா, இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், க.சர்வேஸ்வரன், கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதான ஈகைச்சுடரினை தியாகி.பொன்.சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, அஞ்சலி உரைகளினை அரசியல் பிரமுகர்கள் நிகழ்த்தினர். தியாகி.பொன்.சிவகுமாரனின் 50வது நினைவேந்தலை முன்னிட்டு 50 பொதுமக்களுக்கு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினரால் புடவைகள் வழங்கி வைக்கப்பட்டன.