வடமராட்சி லீக்கின் அனுமதியுடன் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தி வந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (04) இடம்பெறவுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த போட்டி இடம்பெறவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட காலநிலை சீரின்மை காரணமாக போட்டிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த தொடரின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பு விழாவும் இன்று மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் இடம்பெறவுள்ளது.
இறுதிப்போட்டியில், யாழ்.மண்ணின் பலம்வாய்ந்த கழகங்களான நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும், மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.