ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03) மாலை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவினால், குணதிலக்க ராஜபக்ஸ தள்ளப்பட்ட நிலையில், குணதிலக்க ராஜபக்ஸ தவறி படியிலிருந்து கீழே வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ, இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.