குருநாகல் – சத்தியவாதி விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) பேரணியில் சிவில் உடையணிந்த புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
அனுரகுமார திசாநாயக்கவை புகைப்படம் எடுப்பதற்காக நேற்று முன்தினம் (02) நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே மக்களினால் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“சிவில் உடையில் புகைப்படம் எடுப்பது யார் என்று திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தெரியவில்லை.
இந்த சந்தேகத்தின் காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில், நாங்கள் அவரை விசாரித்தோம். பின்னர் அவர் ஒரு பொலிஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.” என குருநாகல் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.