களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் குறித்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.