யாழ்ப்பாணம் – கைதடிப் பிரதேசத்தை மையப்படுத்தி இடம்பெற்று வந்த கைதையூர் பெருந்திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (02) இடம்பெறவுள்ளது.
கைதையூர் பெருந்திருவிழா விழாக்குழுத் தலைவர் அ.கயுந்தன் தலைமையில் இன்று (02) மாலை 6.00 மணிக்கு கைதடி மத்திய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில், கைதையூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு கைதடி பிரதேச சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், பராம்பரிய கலை நிகழ்வுகளும், சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.