உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் வடமராட்சி லீக் அனுமதியுடன் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தி வந்த அணிக்கு 09 வீரர்கள் கொண்ட நாவலர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் இன்று (02) இடம்பெறவுள்ளது.
நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் வி.வகீஸ்வரன் தலைமையில், நவஜீவன்ஸ் விளையாட்டு மைதானத்தில், இன்று இரவு 7.00 மணிக்கு இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, கனகரத்தினம் இளங்கீரன் (பிரதம பொறியியலாளர் – வீதி அபிவிருத்தி அதிகார சபை – யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
இறுதிப்போட்டியில், யாழ்.மண்ணின் முன்னணி அணிகளான் நவிண்டில் கலைமதி அணியும், மணற்காடு சென்.அன்ரனிஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.