யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் நேற்றிரவு (01) 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில், 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுமிகளே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சிறுமிகளும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுமிகளைக் காணவில்லை என தேடிய நிலையில் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களும் காணப்பட்டன. இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.