மட்டக்களப்பு – மண்டூர் பகுதியில் 18 வயதுடைய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியிருந்தார்.
யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்த இளைஞன், வீட்டிற்கு வந்த யுவதியை மீண்டும் காதல் தொடர்புகளை மேற்கொண்ட நிலையில் அதனை யுவதியின் தாயார் கண்டித்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி சில நிமிடங்களில் மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த யுவதி, தவறான முடிவெடுத்த நிலையில் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குறித்த மரணமடைந்த யுவதியின் பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.