யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கணவனின் அவலக்குரல் கேட்டு ஓடிவந்ந மனைவியையும் தாக்கிய கொள்ளைக் கும்பல் அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர்.