யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் அத்துமீறி உள்நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்றிரவு 10 மணியளவில் வெட்டுக்காயத்திற்கு உள்ளான ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(28) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜீன் 11 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.