பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த போது குளவி கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில், ஹொப்டன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.