யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிஸரால் நேற்று (25) கைது செய்யப்பட்டனர்.
வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் குழப்பத்தில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.