கோப்பாய் பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஆசிரியர் இன்று (12) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தென்மராட்சி கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசணை அதிகாரியும், பிரபல தமிழ் பாட ஆசானுமாகிய 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது,
நேற்று மதியம் 1.15 அளவில் கோப்பாய் இராணுவ முகாமிற்கு அண்மித்த பகுதியில் இவ்விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
அதிவேகமாக கோப்பாய் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தின் முன்சில்லு வெடித்து, வீதியோரமாக மெதுவாக வந்த கல்வியாளர் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.