ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக வெளியேறுவார் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரமானவர் என்றும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்காக கடைசி நிமிடத்தில் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்வார் என்றும் அஞ்சப்படுகிறது.
எனினும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க விக்கிரமசிங்கவால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ரணில் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக வெளியேறுவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார்.
(இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)