மனைவியின் அந்தியேட்டிக் கிரியை தினத்தில் அவருடைய கணவனும் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (9) வடமராட்சி கரணவாய் பகுதியில் இடம்பெற்றது.
தர்மலிங்கம் மகேஸ்வரி என்பவர் கடந்த ஓகஸ்ட் மாதம் பத்தாம் திகதி இயற்கை எய்தியிருந்தார். அவரின் அந்தியேட்டிக் கிரியைகள் நேற்றுமுன்தினம் (9) காலை அவரது இல்லத்தில் இடம்பெற்றன. இதையடுத்து அன்று மாலை 4.30 மணியளவில் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக அவரின் கணவரான முத்தன் தர்மலிங்கம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#சஜித் #சஜித் பிரேமதாச #ஐக்கிய மக்கள் சக்தி