கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இரு இந்திய மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கட்டுள்ளார்.
நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் மாயமான மீனவர்கள் இருவரை ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக மீனவர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில், நேற்று மாலை நடுக்கடலில் மாயமான மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.