நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் ஆகியோர் வேட்புமனுக்களை கையளித்த வேட்பாளர்களில் அடங்குவர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 09.00 மணிக்கு வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு முற்பகல் 11.00 மணிக்கு நிறைவடைந்தது.