ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பட்டப்பகலில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணம், ஜனாதிபதியின் தேர்தல் பணிகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பல நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய உள்ளதாகவும், எத்தனை சாக்குபோக்குகள் கூறினாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வது இறுதியானது எனவும் டிலான் பெரேரா மேலும்
தெரிவித்துள்ளார்.