மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று பிற்பகல் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வரகாபொல, நெவ்கல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.
குறித்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.