நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.