கிராண்ட்பாஸ் – வடுல்லாவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றுமொருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.