நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஏற்கனவே இணைந்து செயற்பட்டுள்ளதால், சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.