அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(29) கலந்து கொள்ளவிருந்த எட்டு நிகழ்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையகத்தினால் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடு இத்தகைய நிகழ்வை நடத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும் என்ற காரணத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.