அவிசாவளை – கொனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று (28) உயிரிழந்துள்ளார்.
10 பேர் கொண்ட குழு ஒன்று கெப் வண்டியில் குளிப்பதற்குச் சென்றதாகவும், உயிரிழந்த பாடசாலை மாணவனும் மற்றுமொருவரும் திடீரென நீரில் குதித்து இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.