யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 60க்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று(19) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.