கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட்ட மந்துவில் வடக்கு பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் காணியை துப்பரவு செய்த போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட றம் ஒன்றினுள் வெடிபொருட்களை ஒத்த பொருட்கள் தென்பட்டமையால் அவர் உடனடியாக பொலிஸாருக்கு குறித்த விடயத்தை தெரியப்படுத்தினார்.
இந்நிலையில், கொடிகாமம் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து அவ் இடத்திற்கு விரைந்து குறித்த றம்மை எடுத்த போது அதற்குள் வெடி பொருட்கள் காணப்பட்டன.
இவற்றில் 8 மகசின்கள், 2 கைக்குண்டுகள், 3 மிதி வெடிகள் மற்றும் சுமார் 1000 ரவைகளும் மீட்கப்பட்டன.
குறித்த வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.