வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை மாணவன் மற்றும் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற இருவரும் காயமடைந்துள்ளனர்.
இவர்களை மீட்ட அருகிலுள்ளவர்கள் உடனடியாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.