சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக பணிப் புறக்கணிப்பை மேற்க்கொண்டு வரும் நிலையில் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இன்று காலை(06) வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24 மணித்தியாளங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
இதன்போது வைத்தியசாலையில் ஒன்றுகூடிய பொதுமக்கள், வைத்தியசாலையை இன்று(06) இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும், இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்து வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.