தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (02) பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விடுமுறைக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
அதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.