மறைந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வெற்றிடத்திற்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.