இராமபிரான் பாதம் பெற்ற ஊரெழு மேற்கு பொக்கணை நீறுற்றுக்கு அருகில் கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீ அருட்கதிர்காமக் கந்தன் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெறவுள்ளது.
அதன் படி எதிர்வரும் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்றம் சிவராசா ஹேமலதா குடும்பத்தின் உபயத்தில் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து, 2 ஆம் திருவிழா சகாதேவன் குடும்பத்தின் உபயத்திலும், 3 ஆம் திருவிழா பத்மநாதன் மாலா குடும்பத்தின் உபயத்திலும், 4 ஆம் திருவிழா ஜெகநாதன் வளர்மதி குடும்பத்தின் உபயத்திலும், 5 ஆம் திருவிழா அப்புத்துரை குடும்பத்தின் உபயத்திலும், 6 ஆம் திருவிழா ஞானமுத்து குடும்பத்தின் உபயத்திலும், 7 ஆம் திருவிழா வைரமுத்து குடும்பத்தின் உபயத்திலும் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி செய்வாக்கிழமை வேட்டைத்திருவிழா மாலை 4.00 மணியளவில் செல்லர் குடும்பத்தின் உபயத்தில் இடம்பெறவுள்ளது.
9 ஆம் திருவிழா தர்மலிங்கம் குடும்பத்தின் உபயத்திலும், 10 ஆம் திருவிழா இராசரத்தினம் குடும்பத்தின் உபயத்திலும், 11 ஆம் திருவிழா தெய்வேந்திரம் குடும்பத்தின் உபயத்திலும் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து, 20 ஆம் திகதி சனிக்கிழமை சப்பறத்திருவிழா தர்மகுலநாதன் குடும்பத்தின் உபயத்திலும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தேர் உற்சவம் மார்க்கண்டு குடும்பத்தின் உபயத்திலும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை 10.30 மணியளவில் தீர்த்த உற்சவம் தர்மலிங்கம் குடும்பத்தின் உபயத்திலும் இடம்பெறவுள்ளன.
23 ஆம் திகதி பூங்காவன உற்சவம் சிவலிங்கம் குடும்பத்தின் உபயத்திலும் இடம்பெற்று மகோற்சவம் நிறைவடையவுள்ளது.
கொடியேற்றம் காலை 8.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி 9.00 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று கொடியேற்றம் 10.30 க்கு இடம்பெறும்.
மகோற்சவ காலங்களில் தினமும் காலை 8.30 மணிக்கு பூசை ஆரம்பமாகி 10.30 க்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று 12.00 மணிக்கு சுவாமி வீதியுலா வரும். மாலை 5.30 க்கு பூசை ஆரம்பமாகி, 8.30 க்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா வரும்.
மகோற்சவ காலங்களில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
எனவே முருகப்பெருமானின் மகோற்ச காலத்தில் முருகன் அடியவர்கள் தினமும் ஆலயத்திற்கு வருகை தந்து முருகப்பெருமானின் இஷ்டசித்திகளை பெற்றுய்யும் வண்ணம் ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.