மறைந்த தமிழரசின் பெருந்தலைவர்
இரா. சம்பந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று (02) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையின் போதே இரங்கலை தெரிவித்தார்.
“என்னுடைய ஒரே ஒரு நண்பர் சம்பந்தன் எம்முடன் இல்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து விட்டார். நாங்கள் இக்கட்டான நிலைமையில் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அவர் பாரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்.
அவர் இலங்கையினுடைய இறையாண்மைக்காக பாடுபட்டிருக்கின்றார். அதற்காக அவர் அதிகம் பாடுபட்டார். இன்னும் ஒரு சிறிய அளவில் தான் அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது. அதற்காக நாம் பணியாறுவோம்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்றைய இரவுநேர பிரதான செய்திகளின் தொகுப்பு (02.07.2024)….