யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குருநகர் 5 மாடி கட்டிடப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மைக்கேல் கொலின் டினோ என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.