அம்பாறை பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (07) இடம்பெற்றுள்ளது.பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் குறித்த இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் வந்த இஸ்ரேலிய பிரஜை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.