நாடு பூராகவும் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளை கறுப்புக் கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேறகொள்ளப்பட்டது.
குறித்த சம்பவத்தை கண்டித்து நாளை கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலும் பொலிஸாரின் தாக்குதல்களை எதிர்த்து எதிர்வரும் 2ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலைகளுக்கு எதிரில் ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் இதில் பெற்றோர் இணைந்துகொள்வார்கள் எனவும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.