இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கடும் மழையினால் 70 அடி உயரத்திலிருந்த டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் நால்வர் பரிதாபகமாக உயிரிழந்ததோடு, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையில் சுமார் 15 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நகரம் முழுவரும் வெள்ள நீர் தேங்கி நின்று கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் கடும் மழையினால் புகையிரத போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில புகையிரதங்கள் தாமதமாகவும் புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டில்லியில் இன்னும் ஒரு வாரத்துர்க்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.