அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது.
ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும்.
அதன் பிரகாரம் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஒரு நாளில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் வகையில் ஜூலை மாதம் 17ஆம் திகதி முதல் அதாவது இன்னும் மூன்று வாரங்களின் பின் ஆயத்தப் பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.