ரசிய- உக்ரெய்ன் போரில் பங்குகொண்டு உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் 17 பேரின் குடும்பத்தினரை ரசியாவுக்கு அழைத்து அவர்களுக்கு நட்டஈடு தொகை ஒன்றை வழங்க அந்நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தத்தில் காணாமல் போன மற்றும் காயமடைந்த இராணுவ சிப்பாய்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க ரசிய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், யுத்தத்தில் சிக்கியிருக்கும் இலங்கை இராணுவ வீரர்கள் தொடர்பில் ரசியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் உட்பட குழு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதற்காக ரசியா இணக்கம் தெரிவித்துள்ளது ” – என்றார்.