சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.