இனந்தெரியாத நபரால் மேற்க்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.
நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் இருந்த போது, முகத்தை மறைத்து நிலையில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டு நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.