நாடளாவிய ரீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை பாரியளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் மாணவர்களின் வருகை மிகக் குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதுடன் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து திரும்பி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முடங்கியுள்ளதுடன் மாணவர்கள் வரவும் மிக குறைவாக காணப்பட்டதுடன் பாடசாலைகளுக்கான அதிபர்கள் ஆசிரியர்கள் வரவின்மை காணப்பட்டதால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்பட்டதுடன், அதிகளவான மாணவர்கள் சமூகளிக்கவில்லை.