நாட்டின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக நாளை (24) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என மொட்டுக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையில் அவரது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.