கள்ளச்சாராய விவகாரம் குறித்து தி.மு.க. அரசை கண்டித்து நேற்று (23) தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, தமிழகத்தில் கள்ளக்குறிச்சி – கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் விற்பனை தொடர்பில் தமிழகம் முழுவதும் 84 இடங்களில் 808 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.