யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிக்கப்பட்டுளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட இடத்திற்கு அண்மையில், BIY 6114 இலக்கம் கொண்ட இலக்கத்தகடு ஒன்றும், கோடரி ஒன்றும் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.