மட்டக்களப்பிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் (22) மட்டக்களப்பின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார் .
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் முற்றாக சேதமாக்கப்பட்ட சீயோன் தேவாலயத்தை பார்வையிட வந்துள்ள ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக்கேட்பதற்கு அனுமதிக்கப்படாது வெளியேற்றப்பட்டுள்ளனர்.