நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை தல்பிட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். கடந்த காலம் அனைவருக்கும் தெரியும். முன்னாள் ஜனாதிபதி அனைத்து துறைகளையும் அழித்தார்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னரே நாம் நல்லதொரு நிலையை அடைந்துள்ளோம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.